தீயில் எரிந்த நிலையில் தாய், மகளின் சடலங்கள் மீட்பு

Prabha Praneetha
4 years ago
தீயில் எரிந்த நிலையில் தாய், மகளின் சடலங்கள் மீட்பு

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவில் தீயில் கருகிய நிலையில் தாய், மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

புன்னைநீராவி, நாதன் குடியிருப்பு பகுதியிலேயே நேற்று  மாலை இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் நேற்று  நள்ளிரவு 11.50 மணியலவில் தீீயில் எரிந்ததாக கருதப்படுகிறது. இன்று மாலையே அவர்கள் தீயில் எரிந்து உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் 47 வயதுடைய 7 பிள்ளைகளின் தாயாரும், அவரது மகளான 17 வயதுடைய லக்ஷிகா என்பவருமே இவ்வாறு தீயில் எரிந்து உயிரிழந்துள்ளனர்.

தந்தையும் மகனும் குடும்பச் சுமை காரணமாக கூலிவேலைக்கு வெளி மாவட்டத்திற்கு சென்ற சமயத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4