கிரிந்திவெல விகாரகும்புர பகுதியில் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து

Reha
4 years ago
கிரிந்திவெல விகாரகும்புர பகுதியில் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து

கிரிந்திவெல காவல்துறை பிரிவிற்குட்பட்ட விகாரகும்புர பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்று (21) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கிரிந்திவெல காவல்துறையினர், பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயை அணைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தீக்கிரையான உடைமைகளின் பெறுமதியும் இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதுவேளை தீ பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் கிரிந்திவெல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4