விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் மரணம்

Prathees
4 years ago
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் மரணம்

கெபிதிகொல்லேவ பதவிய பிரதான  வீதியில் கடந்த 20ஆம் திகதி மஹாநெத்தியாவ பிரதேசத்தில்  இடம்பெற்ற  விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளதாக கெபிதிகொல்லேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்கள்இ சியம்பலகஸ்வெவஇ திட்டகோனேவஇ கெபிதிகொல்லேவ பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத சகோதரர்களான லஹிரு நிஷான் குமார (வயது-28) மற்றும் அனுருத்த சிசிர குமார (வயது-26 ) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சாரதியால் லொறியினைக் கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் வீதியின் குறுக்கே வாகனம் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் லொறியின் பின்னால் பயணித்த சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் மானியத்துடன் வீடு கட்ட செங்கற்களை  கொண்டு வரும்போதே இந்த இரண்டு இளைஞர்களே விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4