அயலில் வசிக்கும் ஆணும் பெண்ணும் திடீர் மரணம்: தாயைப் பார்த்து அதிர்ச்சியடைந்த 15 வயது மகள்

#Police
Prathees
4 years ago
அயலில் வசிக்கும் ஆணும் பெண்ணும் திடீர் மரணம்: தாயைப் பார்த்து அதிர்ச்சியடைந்த 15 வயது மகள்

குருநாகல் வெலகெதர பிரதேசத்தில் அயலிலுள்ள பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் திடீர் மரணமடைந்துள்ளமையால் குறித்த பகுதியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மகளும் தாயும் வசித்த வீட்டில் மகள் பாடசாலைக்கு சென்ற போதே தாய் உயிரிழந்துள்ளார்

15 வயதுடைய மகள் பாடசாலை முடிந்து வீட்டிற்கு வரும் போது கதவின் சாவியை பார்த்து, பின் கதவு ஊடாக வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது, ​​தனது தாய் துரதிஷ்டவசமாக ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விசாரணையில் பெண்ணின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ரத்நாயக்க முதியன்சேலாவைச் சேர்ந்த ரூபா நிமாலி (46) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில், அப்பகுதியில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டில் மற்றொரு நபர் தூக்கில் தொங்குவதாக அன்றைய தினம் பக்கத்து வீட்டில் இருந்து பொலிசாருக்கு அழைப்பு வந்தது.

பொலிஸாரின் தேடுதல் வேட்டையில், அருகில் உள்ள வீட்டில் வசித்த 41 வயதுடைய நபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

வெலகெதர பொலிஸார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தியதுடன், 41 வயதுடைய நபர் 46 வயதுடைய திருமணமான பெண்ணுடன் சில காலமாக தொடர்பில் இருந்ததாக அயலவர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


சில பிரச்சனைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்த பெண்ணைக் கொலை செய்த விட்டு தானும்  தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4