கைதியின் மரணத்தால் ஏற்பட்டுள்ள சர்ச்சை

#Prison
Prathees
2 years ago
கைதியின் மரணத்தால் ஏற்பட்டுள்ள சர்ச்சை

எம்பிலிபிட்டிய கதுருகஸ்ஆர வெளி வேலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த லலித் சமிந்த ஹெட்டிகே என்ற கைதி அடித்துக் கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை புலனாய்வு உதவி அத்தியட்சகரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மாத்தறை, கனங்கே கந்தேவத்தையைச் சேர்ந்த லலித் சமிந்த ஹெட்டிகே என்பவருக்கு கடந்த வருடம் மார்ச் மாதம் மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

10இ000 ரூபாவை திருடிய குற்றச்சாட்டின் பேரில் மாத்தறை நீதவான் நீதிமன்றினால் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர் எம்பிலிப்பிட்டியவில் உள்ள கதுருகஸ்ஆர வெளி வேலை முகாமுக்கு மாற்றப்பட்டார்.

அதன்படி டிசம்பர் 2ம் திகதி சமிந்தவை பார்க்க அவரது உறவினர்கள் வெளியூர் முகாமுக்கு சென்றனர்.

வெளி முகாமில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை சமிந்த தனது மகளிடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தனது தந்தை அடித்துக் கொல்லப்பட்டதாக மகள் குற்றஞ்சாட்டியுள்ளார்.