845 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

Prabha Praneetha
4 years ago
845 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் இன்றைய தினம் மேலும் 845 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 601,048 அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 12 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,284 ஆக பதிவாகியுள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4