ஒரு கோடி ருபாய் பெறுமதியான தங்க கைகளுடன் பெண்ணொருவர் கைது

Prathees
4 years ago
ஒரு கோடி ருபாய் பெறுமதியான தங்க கைகளுடன் பெண்ணொருவர் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க வரியில்லாமல் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 1ஒரு கோடி ருபாய் பெறுமதியான நகைகளுடன் பெண் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கண்டி பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய வர்த்தக பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து 599 கிராம் 404 மில்லிகிராம் எடையுள்ள 6 தங்க மோதிரங்களும் 200 கிராம் 44 மில்லிகிராம் எடையுள்ள தங்க நெக்லஸும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பெண் மற்றும் நகைகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் விமான நிலைய சுங்க விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4