வெளிநாட்டில் இருந்து மலிவான விலையில் அரிசியை இறக்குமதி செய்து மோசடி

Prathees
2 years ago
வெளிநாட்டில் இருந்து மலிவான விலையில் அரிசியை இறக்குமதி செய்து மோசடி

இலங்கையில் உள்ள இரண்டு பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருந்து மலிவான அரிசியை இறக்குமதி செய்து, அதை மீண்டும் பதப்படுத்தி, தங்கள் வர்த்தக நாமத்தின் கீழ் சந்தைக்கு வெளியிடும் மோசடியை செயல்படுத்தியுள்ளதாக  தேசிய விவசாய சம்மேளனத்தின் தலைவர் அனுராதா தென்னகோன் ஊடகமொனறுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்கள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி அரிசியை இறக்குமதி செய்துள்ளனர்

சுமார் 30 கொள்கலன் அரிசிகள் துறைமுகத்தில் இருந்து தமது அரிசி ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள், இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை பாலிஷ் செய்து, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி என்ற பெயரில் தங்கள் வர்த்தக நாமங்களில் அதிக விலைக்கு சந்தைக்கு விடுவதன் மூலம் பெரும் லாபம் ஈட்டி வருவதாக தென்னகோன் தெரிவித்தார்.