இஸ்லாமிய பாடப்புத்தகங்களை உடனடியாக திரும்பப்பெற்ற கல்வியமைச்சு! காரணம் என்ன?

Prathees
2 years ago
 இஸ்லாமிய பாடப்புத்தகங்களை உடனடியாக திரும்பப்பெற்ற கல்வியமைச்சு! காரணம் என்ன?

ஒரு நாடு ஒரு சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியினால் பாடசாலைகளில் இஸ்லாமிய மாணவர்களுக்காக வழங்கப்பட்ட புத்தகங்களின் உள்ளடக்கம் குறித்த கவலைகள் காரணமாக கல்வி அமைச்சு 6, 7, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான இஸ்லாமிய பாடப்புத்தகங்களைஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பாடப் புத்தகங்களைப் பெற்ற தேசிய மற்றும் ஏனைய பாடசாலைகளின் அதிபர்களுக்கு கல்வி வெளியீடுகள் திணைக்களம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பாடப்புத்தகங்களைத் திரும்பப் பெறுமாறும், பாடப்புத்தகங்கள் திருத்தப்படும் வரை மாணவர்களுக்கு விநியோகிப்பதை நிறுத்துமாறும்  ஆணையர் ஜெனரல் பி.என். இளப்பெருமவால்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த புத்தகங்களில் சில அருவருப்பான வார்த்தைகள் இருந்ததாக  ஜனாதிபதி செயலணி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனம் ஆகியவற்றால் தெரிவிக்கப்பட்டதாக  ஆணையர் ஜெனரல் பி.என். இளப்பெரும தெரிவித்துள்ளார்.

அதன்படி, மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற அவரது அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில் திரும்ப அழைக்கப்பட்டதாகவும் புத்தகங்களின் உள்ளடக்கத்தில் தீவிரவாத சித்தாந்தம் பற்றிய கருத்துக்கள் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

அந்த பாடப்புத்தகங்களில் சிறிய மாற்றங்களைத் தவிர குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. விரைவில் அவற்றை சரி செய்துஇ திருத்தப்பட்ட புத்தகங்களை வழங்குவோம் என அவர் தெரிவித்தார்.