விக்டோரியா நீர்த்தேகத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்து வருகிறது

Prabha Praneetha
2 years ago
விக்டோரியா நீர்த்தேகத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்து வருகிறது

போதிய மழைவீழ்ச்சி இன்மையால், விக்டோரியா நீர்த்தேகத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.

இந்நிலையில், நீரை ஓரளவான மட்டத்தில் தக்கவைத்துக்கொள்ளவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பொல்கொல்லை நீர்த்தேகத்தின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும், காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.