மற்றொரு சோகம்:  தடுப்பு முகாமில்  ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் யானைகள்

Prathees
2 years ago
மற்றொரு சோகம்:  தடுப்பு முகாமில்  ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் யானைகள்

ஹொரவபொத்தனை யானைகள் தடுப்பு முகாமில் உள்ள காட்டு யானைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மனித நடவடிக்கைகளினால் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு கடந்த 5 ஆண்டுகளில் 12 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவற்றில்  5 யானைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

நாட்டில் நீண்ட காலமாக நிலவி வரும் யானை - மனித மோதலுக்கு தீர்வு காணும் நோக்கில் ஹொரவ்பொத்தானை யானைகள் தடுப்பு நிலையம் 997 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

பயிர்கள் மற்றும் மனித உயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் இங்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் கொண்டு வரப்பட்டுள்ளன.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் 52 காட்டு யானைகள் இந்த மையத்தில் பதிவு செய்யப்பட்டன.

ஆனால் ஜூன் 2019 இல், தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 52 யானைகளில் 12 யானைகள் இறந்துவிட்டதாகக் கண்டறியப்பட்டது.

போதிய உணவுப் பற்றாக்குறையும்இ ஊட்டச்சத்து குறைபாடும் உள்ளதாக அறிக்கை கூறுகிறது

யானைகள் இறந்தது தொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் இதை உறுதிப்படுத்துகின்றன.

எனினும் ஊட்டச்சத்து குறைபாட்டால் யானை இறக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.