பூண்டு மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எனக்கு வெளிநாடு செல்ல தடை: துஷான் குணவர்தன

Prathees
4 years ago
பூண்டு மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எனக்கு வெளிநாடு செல்ல தடை: துஷான் குணவர்தன

பூண்டு மோசடியை நாட்டுக்கு அம்பலப்படுத்திய தனக்கு  வெளிநாடு செல்ல பொலிஸார்  தடை விதித்துள்ளதாக  நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன நேற்று (23) தெரிவித்துள்ளார்.

தொழில் நிமித்தமாக நேற்று முன்தினம்  (22ம் திகதி) வெளிநாடு செல்ல முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூண்டு மோசடி அம்பலம், எரிவாயுக்களின் கலவையில்  மாற்றத்தைப் பற்றி வெளிப்படுத்தி நாட்டுக்கு ஆதரவான முடிவுகளை எடுத்த அவரைப் போன்ற ஒருவருக்கு இவ்வாறு  செய்தமைக்காக சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக எதிர்வரும் இரண்டு மூன்று தினங்களுக்குள் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  துஷான் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4