தமிழர்களுக்காக ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்!

#SriLanka
Nila
4 years ago
தமிழர்களுக்காக ஜனாதிபதி எடுத்துள்ள  தீர்மானம்!

இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் தமிழ் கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தத் தகவலை வெளியிட்டார்.

தமிழ் மக்களின் பிரச்சினை அரசியல் தீர்வு மாத்திரமல்ல. அதைவிட அவர்களின் அத்தியாவசிய தேவைகளைத் தீர்ப்பதே முக்கியம். அவற்றைத் தீர்த்து வைப்பது தொடர்பிலேயே முதலில் நாம் கவனம் செலுத்துகின்றோம்.

திறந்த மனதுடன் தமிழர் தரப்புடன் பேச்சு நடத்த ஜனாதிபதி தலைமையிலான அரசு தயார் நிலையில் உள்ளது. அந்தப் பேச்சு விரைவில் ஆரம்பிக்கப்படும். எனவே, முதலில் அத்தியாவசிய தேவைகளுக்கு - அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் திட்டமாக உள்ளது. இவற்றுக்கு முதலில் தீர்வு கண்டால் அரசியல் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காணமுடியும்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட வேண்டும். நாட்டைப் பிளவுபடுத்தி இனவாத ரீதியில் செயற்பட அவர்கள் முற்படக்கூடாது.

நாட்டை முன்னோக்கி கொண்டும் செயற்பாடுகளுக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அரசுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4