ஒமிக்ரானின் புதிய அறிகுறிகள்?..

Keerthi
4 years ago
ஒமிக்ரானின் புதிய அறிகுறிகள்?..

ஓமிக்ரான் தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு புதிய அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

தற்போது உலக நாடுகளில் பரவி வரும் ஒமிக்ரான் தொற்றின் அறிகுறிகள் என்ன? என்பது சரியாக தெரிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்ததன் மூலம் அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஒரு புது அறிகுறியை கண்டறிந்திருக்கிறது.

அதாவது, ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்ட பலருக்கு காதுவலி ஏற்பட்டிருக்கிறது. அதில் சிலருக்கு காதில் வித்தியாசமான சத்தம் கேட்டிருக்கிறது. மேலும், சிலருக்கு காது அடைக்கும் பிரச்சனையும், சிலருக்கு காதில் விசில் சத்தமும் கேட்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4