சீரற்ற வானிலை: இரத்தினபுரியில் 1,100 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

#SriLanka #weather #people #Ratnapura #Lanka4 #Flood #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
சீரற்ற வானிலை: இரத்தினபுரியில் 1,100 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

இரத்தினபுரி மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 273 குடும்பங்களைச் சேர்ந்த 1,103 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் எம்.ஜே.லலித் ஆனந்த தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பெய்து வரும் தொடர் கடும் மழை, வெள்ளப் பெருக்கு, சுழல்காற்று மற்றும் மண்சரிவு போன்ற பலதரப்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, காஹவத்தை, குருவிட்ட, எலபாத்த, பெல்மதுளை மற்றும் கொடக்கவெல ஆகிய 6 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 26 கிராம சேவகர் பிரிவுகளில் இந்தப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இந்த அனர்த்தங்களின் போது 7 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதுடன், இடம்பெயர்ந்த 4 குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் இரத்தினபுரி சிவன் கோவிலில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்கும், அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்டச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4