இலங்கைக்கு ஆபத்தாகும் எதிர்வரும் வாரங்கள்!

#SriLanka
Nila
2 years ago
இலங்கைக்கு ஆபத்தாகும் எதிர்வரும்  வாரங்கள்!

16 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட வயதெல்லையை கொண்ட தரப்பிற்கு, இன்று (25) முதல் பைசர் தடுப்பூசியின் இரண்டாவது மருந்தளவு செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.

முதலாவது மருந்தளவை செலுத்திக்கொண்டு, மூன்று மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கே, இரண்டாவது மருந்தளவு செலுத்தப்படும் எனவும் அவர் கூறுகின்றார்.

அத்துடன், 20 வயதுக்கு மேற்பட்ட தரப்பினர், இரண்டாவது மருந்தளவை செலுத்திக்கொண்டு, மூன்று மாதங்கள் பூர்த்தியாகியிருக்கும் பட்சத்தில், பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூன்றாவது மருந்தளவிற்கு தேவையான பைசர் தடுப்பூசி, போதுமானளவு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரோன் பிறழ்வு மிக வேகமாக பரவி வருகின்றமையினால், எதிர்வரும் ஓரிரு வாரங்கள் இலங்கைக்கு சவால் மிக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

முதலாவது மற்றும் இரண்டாவது மருந்தளவுகளை செலுத்திக்கொண்டு, சிலருக்கு 5 அல்லது 6 மாதங்கள் கடந்துள்ளமையினால், அந்த தடுப்பூசியின் செயற்பாடு தற்போது வலுவிழந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அதனால், இயலுமான வரை விரைவாக சென்று, பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன கேட்டுக்கொண்டுள்ளார்.