இலங்கையில் பொதுத் தேர்தல்: நிராகரித்த அரசாங்கம்

Mayoorikka
2 years ago
இலங்கையில் பொதுத் தேர்தல்: நிராகரித்த அரசாங்கம்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளியான செய்தியை ஸ்ரீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
 
எனினும் விரைவில் இலங்கையில் தேர்தல் நடைபெறும் என ஒரு சிலர் கருதுவதாக ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்  கூறினார்.
 
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், அரசாங்கம் மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்ற இன்னும் 3 வருடங்கள் காணப்படுவதாக கூறினார்.
 
அரசாங்கத்தின் தரப்பில் சில குறைபாடுகள் காணப்படுகின்ற போதிலும் அந்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு மூன்று வருடங்கள் அவகாசம் காணப்படுவதாக தெரிவித்தார்.
 
அந்த மூன்று ஆண்டுகளை எவ்வாறு சிறப்பாக பயன்படுத்த முடியும் என்பதை தற்போது முதல் ஆராய வேண்டும் என வலியுறுத்தினார்.
 
அத்துடன் பொது மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான திட்டம் அரசாங்கத்திடம் உள்ளதாக தெரிவித்தார்.
 
சில அமைச்சர்களின் தீர்மானங்கள் அல்லது செயற்பாடுகளை அரசாங்கத்திலுள்ள உறுப்பினர்கள் விமர்சிப்பதற்கு இடமுள்ளதாகவும் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
 
எனினும் பொது மக்கள் மத்தியில் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய அவர், கவலைகள் அல்லது விமர்சனங்களை அரச கூட்டங்களில் முன்வைக்க வேண்டும் என
வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!