பாதுகாப்பு காரணங்களால் பிற்போடப்பட்ட வெடிபொருட்கள் தோண்டும் நடவடிக்கை!

Mayoorikka
2 years ago
பாதுகாப்பு காரணங்களால் பிற்போடப்பட்ட வெடிபொருட்கள் தோண்டும் நடவடிக்கை!

முல்லைத்தீவு உடையார்கட்டு காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் வெடிபொருட்கள் தோண்டும் நடவடிக்கை பாதுகாப்பு காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு உடையார் கட்டு காட்டுப்பகுதியில் வெடிபொருட்களை தோண்டி எடுக்கும் நடவடிக்கையின் முயற்சி ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்ட போதும் பாதுகாப்பு காரணங்களுக்காக குறித்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் நிலத்தில் மேல் காணப்பட்ட இரண்டு எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.

உடையார் கட்டு காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் வெடிபொருட்கள் காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலீசாரால் முறைப்பாடுசெய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நேற்று குறித்த பகுதியில் அகழ்வு பணிகள் இடம்பெற்றன.

உடையார் கட்டுப்பகுதியில் இருந்து சுமார் பத்து கிலோமீற்றர் தூரம் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிஇபடைஅதிகாரிகள் சிறப்பு அதிரடிப்படையினர் கிராமசேவையாளர் உள்ளிட்டவர்கள் குறித்த பகுதியினை பார்வையிட்டுள்ளதுடன் கனரக இயந்திரமும் காட்டுப்பகுதிக்கு
கொண்டுசெல்லப்பட்டது.

ஏற்கனவே தோண்டப்பட்ட பகுதியில் வெபொருட்கள் காணப்படுவதாக அடையாளம் காட்டப்பட்டு நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது. இதன்போது குறித்த பகுதி சாதாரண இயந்திரந்தினால் அப்புறப்படுத்துவது ஆபத்தானதென சிறப்பு அதிரடிப்படையினரால் நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பூர்த்தி செய்ததன் பின்னர் குறித்த இடத்தினை அகழ்வு செய்ய நீதிமன்றத்தினால் கட்டளை
வழங்கப்படும் என நீதவான் சம்பவ இடத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.