யாழில் வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் தாக்குதல்!

Mayoorikka
4 years ago
யாழில் வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் தாக்குதல்!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை இரவு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறுக்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய வன்முறை கும்பல் வீட்டினுள் புகுந்து யன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டது.

பின்னர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை அடித்து நொறுக்கியத்துடன் காருக்கும் தீ வைத்துள்ளனர்.

அத்துடன் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் தீ வைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4