முல்லைத்தீவில் புலனாய்வாளர்களால் சாரதிமீது தாக்குதல்!

Mayoorikka
4 years ago
முல்லைத்தீவில் புலனாய்வாளர்களால் சாரதிமீது தாக்குதல்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று இராணுவ புலனாய்வாளர்கள் வீதியால் சென்ற டிப்பரினை வழிமறித்து சாரதிமீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தியதில் கண் மற்றும் முதுகு பகுதிகளில் காயமடைந்த நிலையில் டிப்பர் சாரதி புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு கைவேலிப்புதியில் பயணித்த வேளை டிப்பரினை மறித்த சிவில் உடை தரித்த இராணுவ புலனாய்வாளர்கள் டிப்பரில் எதுவும் இல்லாத நிலையில் சாரதியினை இறக்கி இரும்பு கம்பியினால் தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இதன்போது கண்ணில் காயமடைந்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைவேலி பகுதியினை சேர்ந்த 41 அகவையுடைய நவரத்தினம் உதயசீலன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4