இலங்கை மீண்டும் முடக்கப்படுமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்!

#SriLanka #Lockdown #Keheliya Rambukwella
Nila
2 years ago
இலங்கை மீண்டும் முடக்கப்படுமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இலங்கையில் மூன்றாவது முறையாக லொக்டவுன் செய்வதற்கு எவ்வித ஆயத்தங்களும் மேற்கொள்ளப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

 சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
 
நாடு மீண்டும் முடங்கினால் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்.  எப்படியிருப்பினும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்னும் வேகமாக முன்னெடுக்கப்படும்.
 
ஒரு வருடத்திற்கு தடுப்பூசிகளை மிகவும் வெற்றிகரமாக செலுத்திய உலகின் முதல் 5 நாடுகளுக்கு இலங்கை உள்ளடங்குகின்றது. அந்த நிலைமையை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதற்காக பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்வது மக்களின் பொறுப்பாகும்.
 
இதுவரையில் உலகின் பணக்கார நாடுகளில் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
 
இவ்வாறான நிலைமையில் இருந்து தப்பி கோவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் பல நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
சிலர் பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் தேவையற்ற அச்சத்தையும் அடிப்படையற்ற பிரச்சாரங்களையும் முன்னெடுக்கின்றனர். அதில் எவ்வித உண்மையும் இல்லை என வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசிகளை உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.