தென் கடற்பரப்பில் ஹெரோயினுடன் பிடிபட்ட சந்தேகநபர்கள் அளித்த வாக்குமூலம்

Prathees
4 years ago
தென் கடற்பரப்பில் ஹெரோயினுடன் பிடிபட்ட சந்தேகநபர்கள் அளித்த வாக்குமூலம்

கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவினர் இணைந்து தென் கடற்பரப்பில் ஹெரோயின் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளனர்.

ஹரக் கட்டா, ரன் மல்லி மற்றும் ஜோதி ஆகியோரால்  இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் காரணமாக தாம் ஹெரோயின் போதைப்பொருளை கடல் மார்க்கமாக கரைக்கு கொண்டு வந்ததாக கடலில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (25) கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் கடற்படை தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர் இரண்டு இழுவை படகுகளில் இருந்த சந்தேக நபர்களிடம் இந்த மோசடி குறித்து பாதுகாப்பு செயலாளர் விசாரணை நடத்தினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4