இன்றைய வேத வசனம் 26.01.2022

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 26.01.2022

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

தமிழ் தேசத்திற்கு வந்து, சென்னை பட்டணத்திலே தன் இரத்தத்தை ஊற்றி, இரத்தச் சாட்சியாய் மரித்தவர் தோமா அப்போஸ்தலன்.

வேதபுத்தகத்தில் தோமாவின் இறுதி நாட்களைப் பற்றி எந்தக் குறிப்பும் காணப்படாவிட்டாலும், "தோமாவின் நடபடிகள்" என்ற புத்தகத்தில் அனேக விபரங்கள் உங்களுக்குக் கிடைக்கின்றன.

கிறிஸ்துவின் பரமேறுதலுக்குப் பின், எந்தெந்த சீஷன் எந்தெந்த தேசத்துக்குப் போக வேண்டும் என்பதைப் பற்றி சீட்டுப் போட்டார்களாம். அதில் தோமாவிற்கு நம்முடைய தேசம் விழுந்தது.

ஐயோ நான் எபிரேயன்;  இந்த தேசத்தாரை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதே" என்று திகைத்தாராம். அன்று இரவு கிறிஸ்து அவருக்கு தரிசனத்தில் தோன்றி, "தோமாவே பயப்படாதே என் கிருபை உன்னோடு கூட இருக்கும்" என்று பலப்படுத்தவே, தோமா நம்முடைய நாட்டிற்கு உடனே புறப்பட்டு விட்டாராம்!

தன்னைத்தானே அடிமை வியாபாரிகளிடம் விற்று, ஒரு அடிமையாக நம்முடைய தேசத்திற்குள் நுழைந்தாராம்!

அவரைப்பற்றி கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் வழங்கி வரும் கதைகள் எண்ணற்றவை. அவர் உள்ளம் முழுவதும் தியாகத்தினாலும், கல்வாரி அன்பினாலும் நிறைந்திருந்தது.

ஆரம்ப விசுவாசத்தில், அவர் சற்று தயங்கினாலும், தடுமாறினாலும், தாமதமாகயிருந்தாலும் ,விசுவாசித்த பிறகு வீரனாக, தான் அறிந்த விசுவாசத்திற்காக இரத்த சாட்சியாக நிற்கவும் துணிந்தார்.

அவரது தியாகமான வாழ்க்கை உங்களையும் தூண்டி எழுப்புவதாக! ஆமென்..

யூதா 1:3

பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.