பாகிஸ்தான் பிரதமர் - பந்துல குணவர்தன சந்திப்பு

Mayoorikka
4 years ago
பாகிஸ்தான் பிரதமர் - பந்துல குணவர்தன சந்திப்பு

பாகிஸ்தானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பந்துல குணவர்தன, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், “இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக உடன்படிக்கையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது அவசியம்” என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, பாகிஸ்தானுடனான கொடுக்கல், வாங்கல்களை மேலும் வலுப்படுத்துவதற்காக அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தாம் உள்ளிட்ட வர்த்தக குழுவினருக்கு வழங்கிய வரவேற்புக்கு வர்த்தக அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன நன்றி கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4