உலகளவில் 35,89 கோடி பேருக்கு கொரோனா

Keerthi
4 years ago
உலகளவில் 35,89 கோடி பேருக்கு கொரோனா

சீனாவின் உகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி 3-வது அலை, 4-வது அலையாக உருவெடுத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதன் கோர முகத்தை பல்வேறு வடிவங்களில் காட்டி வருகிறது.

இந்நிலையில்,  உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,89,26,712 ஆக உயர்ந்துள்ளது.  உயிரிழந்தோர் எண்ணிக்கை 56,33,138 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 28,44,49,306 ஆகவும் உள்ளது.  56,33 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்காவில் புதிதாக 3,83,221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,386 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்காவில் மொத்தம் 7.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 8,94,655 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

ஒரே நாளில் பிரான்சில் 1.29 லட்சம், ஸ்பெயினில் 1.14 லட்சம், பிரேசிலில் 1.99 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4