இலங்கையில் பிளாஸ்டிக் கழிவால் பலியாகும் யானைகள்.. அதிர்ச்சி தகவல்.!!!

Keerthi
2 years ago
இலங்கையில் பிளாஸ்டிக் கழிவால் பலியாகும் யானைகள்.. அதிர்ச்சி தகவல்.!!!

இலங்கையில் இருக்கும் தீகவாபி, அம்பாறை போன்ற பகுதிகளில் கிடந்த குப்பைகளை உண்ட 2 யானைகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் யானைகள் அதிகளவில் பலியாவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் கிழக்கு மாகாணத்தில் குப்பை கிடங்குகள் திறந்தவெளியில் இருப்பதால் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடக்கிறது.

இதனை உண்ணும் யானைகள் அதிகமாக பலியாகிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மேலும் 2 யானைகள், பிளாஸ்டிக் கழிவால், பலியானதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பலியான யானைகளை பரிசோதித்ததில் அவற்றின் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது தெரியவந்திருக்கிறது.