புளியின் மகத்துவம் பற்றி தெரியுமா?
#Health
#Benefits
#Tamarind
Mugunthan Mugunthan
2 years ago
- புளியம்பழத்தில் சதைப்பற்றில் டார் டாரிக் அமிலம் 8 சதவீதம் உள்ளது. சிட்ரிக் அமிலம் 4 சதவீதம் உள்ளது. அசிட்டிக் அமிலம், பொட்டாசியம், சர்க்கரை 4 சதவீதமும் உள்ளன.
- கொட்டையில் கொழுப்புச்சத்தும், கார்போஹைட்ரேட்டும் 63 சதவீதம் உள்ளன.
- நார்ச்சத்தில் பாஸ்பரஸ், நைட்ரஜன் முதலியன அடங்கியுள்ளன. பழத்தில் ஆர்சானிக் அமிலம் இருக்கிறது.
- உடலில் ஏற்படும் பித்த வெடிப்புகளுக்கு பழம்புளியை நீரில் கரைத்து பனை வெல்லம் சேர்த்து குடிக்க, பித்தமும், பித்தத்தடிப்பும் குணமாகும்.
- இதன் இலையின் கொழுந்தும் உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும் வல்லமை உள்ளது.
- இந்த இலையை அரைத்து மூட்டுவாத வீக்கம் மீது பற்றுப்போட்டால் வீக்கம் குறைந்து வலியும் குறையும்.
- விளாம்பழத்தைச் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடுவதுபோல புளியம்பழத்தையும் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் உடல் நல்ல குளிர்ச்சி பெறும்.
- இதன் தோலைப் பொடித்து தூளாக்கி பல் துலக்கி வந்தால் பல் நோய் நீங்கும்.
மேலும் ஆரோக்கிய தகவல்களை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.