பாடசாலையில் கொரோனா: மருத்துவ நிபுணர் விளக்கம்

Mayoorikka
2 years ago
பாடசாலையில் கொரோனா: மருத்துவ நிபுணர் விளக்கம்

வகுப்பறையில் ஒரு குழந்தையிடம் இருந்து மற்றொரு குழந்தைக்கு கொவிட் பரவும் அபாயம் மிகவும் குறைவு என்று லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான குழந்தைகள் வௌி சமூகத்தில் இருந்தே கொவிட் நோயால் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"வகுப்பறையில் ஒரு குழந்தையிலிருந்து மற்றொரு குழந்தைக்கு நோய் பரவும் அபாயம் மிகக் குறைவு, அதேசமயம் வயதான மாணவர்களிடையே இது அதிகரிக்கலாம். ஆனால் தற்போது குழந்தைகள் மத்தியில் நல்ல சூழ்நிலை உள்ளது. 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியை இலவசமாகப் பெறலாம். இந்த வசதிகள் அனைத்தும் குழந்தைகளிடையே நோய் பரவுவதைக் குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது."