தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -29
ஐஞ்சிறு காப்பியங்கள்
ஐஞ்சிறு காப்பியங்கள் - உதயண குமார காவியம்
- உதயண குமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன-
- உஞ்சைக் காண்டம், இலாவாணக் காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம் மற்றும் துறவுக் காண்டம்.
- இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. உதயண குமார காவியம் மொத்தம் 367 பாடல்களை உள்ளடக்கியது.
- இதன் ஆசிரியர் இன்னாரென்று தெரியவில்லை. உதயண குமார காவியம் என்பது பெருங்கதை என்னும் இலக்கியத்தைச் சுருக்கி எளிமைப்படுத்தித் தரும் இலக்கியம் ஆகும். இந்நூலின்கண் 367 செய்யுட்கள் உள்ளன.
ஐஞ்சிறு காப்பியங்கள் - நாக குமார காவியம்
- இதன் ஆசிரியரும் ஒரு சமணப் பெண்துறவியே. பெயர் அறியக் கிடைக்கவில்லை.
- 5 சருக்கங்களில் 170 விருத்தப்பாக்களில் நாகபஞ்சமியின் கதையை உரைக்கும் சிறுகாப்பியமாகும் இது. முழுக்க முழுக்க மணத்தையும் போகத்தையும் மட்டுமே பேசுகிறது.
- 519 பெண்களைக் கதையின் நாயகன் மணக்கிறான். காவிய நயமோ அமைதியோ சிறிதும் இல்லாத நூல் இது. காலம் கி.பி.16-ஆம் நூற்றாண்டு.
- அழிந்து போன நூல் என்று கருதப்பட்ட இதனை சமண அறிஞர் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களின் உதவியால் மு.சண்முகம் பிள்ளை பதிப்பித்துள்ளார்.
ஐஞ்சிறு காப்பியங்கள் - யசோதர காவியம்
தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இந்நூல் நான்கு சருக்கங்களில் 320 விருத்தப்பாக்களால் ஆன இதன் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை.
ஐஞ்சிறு காப்பியங்கள் - சூளாமணி
இதன் ஆசிரியர் வர்த்தமான தேவர் எனப்படும் தோலாமொழித் தேவர்.
12 சருக்கங்களில் 2131 விருத்தப்பாக்களால் இயற்றப்பட்டது இந்நூல்.
ஆருகத மகாபுராணத்தைத் தழுவியது. பாகவதத்தில் வரும் பலராமன், கண்னன் போன்று இக்காப்பியத்திலும் திவிட்டன் விசயன் என்னும் இரு வடநாட்டு வேந்தர்களின் வரலாறாக இந்நூல் உள்ளது.
பாகவதமும் சூளாமணியும் கதை நிகழ்ச்சிகளில் ஓரளவு ஒத்து உள்ளன. சிரவணபெல்கோலா கல்வெட்டில் இந்நூல் பற்றிய குறிப்பு உள்ளது.
இந்நூலின் பாயிரம் தரும் குறிப்பின்படி, கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவனி சூளாமணி மாறவர்மன் என்னும் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேறியது என்று தெரிகிறது.
இது சிறுகாப்பிய வகையில் இருந்தாலும் பெருங்காப்பியப் பண்புகள் மிகுந்த நூலாகக் கருதப்படுகிறது.
இராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் உயிர்களைப் பலியிட்டு வந்தான்.
அவனுக்கு உயிர்க்கொலை தீது என்று உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காப்பியம் இது. மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது இந்நூல்.
இது ஒரு வடமொழி நூலின் தழுவல். எளிய நடையும் நயமான பாக்களும் உடைய நூல் இது. காலம் 13-ஆம் நூற்றாண்டு.
இசை காமத்தைத் தூண்டும் என்பதையும், கர்மத்தின் விளைவுகளையும் எடுத்தியம்பும் இக்கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் கதையின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் கூறுவோர் உண்டு.
ஐஞ்சிறு காப்பியங்கள் - நீலகேசி
நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்று.
சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது.
தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது.
எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை.
இந்நூல் கடவுள் வாழ்த்து தவிரப் 10 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. இப் பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன
தொடரும்....
மேலதிக தமிழர் வரலாறும் தொன்மையும் பாகங்களைப் பார்வையிட Click Here