டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10வது ஐ.சி.சிடி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரை நடத்துகிறது. இதில் இன்று நடைபெற்ற 3வது ஆட்டத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணி மோதியது.
இதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா , இஷான் கிஷான் களமிறங்கினர்.
தொடக்கத்தில் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் ரிங்கு சிங் , ஹர்திக் பாண்டியா 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அக்சர் படேல் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மறுபுறம் சூர்யகுமார் யாதவ் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 84 ரன்கள் எடுத்தார்.
அமெரிக்கா அணியில் ஷாட்லி வான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து, 162 ரன்கள் என்ற இலக்குடன் அமெரிக்கா களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், மிலிந்த் குமார் மற்றும் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி ஜோடி சற்று நிதானமாக ஆடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில் மிலிந்து குமார் 34 ரன்களில் அவுட் ஆனதை தொடர்ந்து, அடுத்து வந்த சுபம் ரன்ஜனேவுடன் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி ஜோடி சேர்ந்தார்.
இறுதியில் அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
(வீடியோ இங்கே )