குப்பைகளை தின்று காட்டு யானை உயிரிழந்த சம்பவம்: வனஜீவராசிகள் அமைச்சரின் பதில்

Prathees
2 years ago
குப்பைகளை தின்று காட்டு யானை உயிரிழந்த சம்பவம்: வனஜீவராசிகள் அமைச்சரின் பதில்

யானைகள் குப்பைகளை சாப்பிட வருவதை தடுக்க பள்ளக்காடு குப்பை மேட்டைச் சுற்றி அகழிகளை தோண்ட நடவடிக்கை எடுத்த போதிலும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை என வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள பள்ளக்காடு குப்பைகளை தின்று காட்டு யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஊடகமொன்றிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் தீகவாபி பள்ளக்காடு பிரதேசத்தில் 2008 இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டமாக இந்த பொறியியல் நிலப்பரப்பு நிறுவப்பட்டுள்ளது.

அதன்படி அம்பாறை மாவட்டத்தின் கரையோர வலயத்திலுள்ள 9 உள்ளுராட்சி மன்றங்களின் குப்பைகள் 13 வருடங்களாக இந்த இடத்தில் கொட்டப்பட்டு வருகின்றன.

எனினும்இ புத்தங்கல சரணாலயத்தில் இருந்து லாஹுகல தேசிய பூங்காவிற்கு காட்டு யானைகள் இடம்பெயர்ந்து செல்லும் பாதையில் இது அமைந்துள்ளது.

காட்டு யானைகள் உள்ளே வராத வகையில் மின் வேலி அமைக்கப்பட்டு, 2014ம் ஆண்டு மின்னல் தாக்கியுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிர்வாகத்திற்கு பொறுப்பான மின்வேலி திட்டம்

இதுவரை சீரமைக்கப்படாததால்இ பள்ளக்காடு பகுதிக்கு வரும் காட்டு யானைகள், குப்பைகளை தின்று வருகின்றன.

கடந்த 8 ஆண்டுகளில் 20 காட்டு யானைகள் உயிரிழந்திருப்பது சோகம்.

பள்ளக்காடு பகுதியில் குப்பைகளை உண்ணும் காட்டு யானைகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அசோசியேட்டட் பிரஸ் சமீபத்தில் சிறப்பு செய்தி வெளியிட்டது.

ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குறிப்பைப் பதிவிட்டுள்ளார்.

அவர் பகிர்ந்த ஊடக அறிக்கையின்படி, கடந்த வார இறுதியில் இரண்டு யானைகள் குப்பைகளை தின்று இறந்தன.

பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கவனக்குறைவால் நாளுக்கு நாள் இந்த விலங்குகள் தங்கள் உயிரைக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.