கோவிட் நோயாளிகளால் நிரம்பியுள்ள கொழும்பு தேசிய மருத்துவமனையின் 5வது வார்ட்

#Colombo
Prathees
2 years ago
கோவிட் நோயாளிகளால் நிரம்பியுள்ள கொழும்பு தேசிய மருத்துவமனையின் 5வது வார்ட்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது 5 வது வார்ட்டில்  ஏராளமான கோவிட் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சந்தன கஜநாயக்க நேற்று (27) தெரிவித்தார்.

வைத்தியசாலையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட ஒரு குழு தற்போது கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில்இ மருத்துவமனையில் 100க்கும் குறைவான கோவிட் நோயாளிகள் இருந்தனர். ஆனால் தற்போது 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

ஒரு நாளைக்கு 10 முதல் 20 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நோயாளர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள்.

மக்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். சுகாதாரத்துறையால் அனைத்தையும் செய்ய முடியாது.

சுகாதாரப் பணியாளர்களுக்கும் கூட வரம்புகள் உள்ளன. எனவே ஒவ்வொருவரும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது மிகவும் அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.