கோட்டாபயவிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சவால்!

Mayoorikka
2 years ago
கோட்டாபயவிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சவால்!

தனது பதவிக் காலத்தில் மனிதவுரிமை மீறல்களை ஆதரிக்கவில்லை எதிர்காலத்திலும் இத்தகைய செயலுக்கும் இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தெரிவித்தமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றில் ஆற்றிய உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு துணிவிருந்தால், றோம் அனைத்துலக சட்டத்துக்கு முன் திகதியிட்டு அனைத்துலக பொறுப்புக்கூறல் செயல்வழி இயங்க முதலில் இடமளிக்கட்டும் என அவர் சவால் விடுத்துள்ளார்.

தனது பதவிக் காலத்தில் அரசாங்கம் எவ்வடிவிலும் மனிதவுரிமை மீறல்களை ஆதரிக்கவில்லை என்ற கோட்டாபயவின் கருத்துக்கு பதிலுரைத்த பிரதமர் வி.உருத்திரகுமாரன், போரின் இறுதிக் கட்டங்களில் இழைக்கப்பட்ட குற்றங்கள் அமைப்புசார் குற்றங்களாகும் என்று ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர் அல்-உசைன் கூறியுள்ளதை நினைவு படுத்தியுள்ளார்.