தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 30.
#Article
#Tamil People
#history
Mugunthan Mugunthan
2 years ago
அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)
- அவ்வையார் என்ற பெயரில் தமிழகத்தில் ஒரு பெண் பால் புலவர் இருந்துள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை.
- ஆனால் அவ்வையார் என்ற பெயரில் நான்கு புலவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் இருந்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
- முதலாவதாக வாழ்ந்தவர் சங்ககால அவ்வையார். இவர் தொண்டை நாட்டு மன்னர் அதியமானுக்கு நல்ல நண்பர்.
- நீண்டநாள் வாழ்வைத் தரும் நெல்லிக்கனியை மன்னர் அதியமான் தான் உண்ணாது அவ்வை நீண்டநாள் வாழவேண்டும் எனக் கருதி கொடுத்தார் என்பது வரலாற்றுக்கதை. இந்த அவ்வையார் சங்க இலக்கியத்தில் 59 பாடல்களைபாடியுள்ளார்.
- பக்திக்கால இறுதியில் விநாயகர் அகவலைப் பாடியவர் இரண்டாவது அவ்வையார்.
- இவர் பாடிய விநாயகர் அகவலைத்தான் விநாயகரை வழிபடுபவர்கள் முதல் நூலாகக் கொள்வர்.
- இது மிகுந்த பக்திச் சுவையுடைய நூல். ஆழ்ந்தபொருளுடையது. அதற்குப் பலர் பல விளக்கங்கள் எழுதியுள்ளனர்.
- மூன்றாவது அவ்வையார், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர்.
- சங்ககால அவ்வையார் அரசர்களோடு பழகி வாழ்ந்தவர்.
- இரண்டாம் அவ்வையார் பக்தர்களோடு வாழ்ந்தவர். மூன்றாம் அவ்வையார் குழந்தைகளோடு வாழ்ந்தவர்.
- குழந்தைகளுக்காக நீதி நூல்களை எழுதியவர். சிறுவயதில் மனப்பாடம் செய்து கொண்டு, வயதான பின்பு பொருளைத் தெளிவாக உணரும் நிலையில் அமைந்தவை இவர் பாடல்கள்.
- நான்காவது அவ்வையார் தனிப்பாடல்கள் மிகுதியாகப் பாடியவர். முருகன் குழந்தை நிலையில் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று அவ்வைப்பாட்டியிடம் கேட்க, அவன் மரத்தை உலுப்ப, பழங்கள் மண்ணில் விழ, பழத்திலுள்ள மண்ணை நீக்க அவ்வை ஊத, 'பழம் சுடுகிறதா? பாட்டி, என்ற கதையுடன் தொடர்புடைய அவ்வையார். இவர் மிகச் சிறந்த கருத்துள்ள தனிப்பாடல்களைப் பாடியுள்ளார்.
அவ்வையாரின் நூல்களில் 7 மட்டுமே கிடைத்துள்ளன. அவை :
- ஆத்திசூடி (Atticcuti)
- கொன்றை வேந்தன் (Konraiventan)
- நல்வழி (Nalvazhi)
- மூதுரை (Moodurai)
- ஞானக்குறள் (Gnanakural)
- விநாயகர் அகவல் (Vinayakar Akaval)
- நாலு கோடிப் பாடல்கள் (4 Kodi Padalkal)