பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள IMF இன் ஆதரவை எதிர்பார்க்கும் இலங்கை

Prathees
2 years ago
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள IMF இன் ஆதரவை எதிர்பார்க்கும் இலங்கை

தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் பைனான்சியல் டைம்ஸ் நடாத்தி உள்ளது.

6.9 பில்லியன் டொலர் கடனை இவ்வருடம் செலுத்துவது இலங்கைக்கு மிகவும் கடினமானது எனவும், மருந்துகள், மூலப்பொருட்கள், எரிபொருள் உட்பட சகலவற்றிற்கும் நிதியைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இவ்வருடம் வழங்கப்பட வேண்டிய கடன்களுக்கான சலுகைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் சர்வதேச இறைமை பத்திரம் வைத்திருப்பவர்களுடன் இலங்கை கலந்துரையாடி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து மாற்று வழிகளுக்காகவும் அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படுவதாக தெரிவித்துள்ள நிதியமைச்சர், கடனை செலுத்துவதை தவிர்த்து பொருளாதார நெருக்கடியை போக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும், அதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பெலிஸ், சாம்பியா மற்றும் ஈக்வடார் நாடுகளுக்குப் பிறகு, தொற்றுநோய்க்குப் பிறகு இலங்கையும் ஒரு இறையாண்மைக் கடன் செலுத்தாத நாடாக மாறும் என்று பல முதலீட்டாளர்கள் கணித்துள்ளனர் என பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.