துப்பாக்கிதாரியின் குறியிலிருந்து தப்பிய அம்புலன்ஸ் சாரதி

#Police
Prathees
2 years ago
துப்பாக்கிதாரியின் குறியிலிருந்து தப்பிய அம்புலன்ஸ் சாரதி

பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று அம்புலன்ஸ் சாரதி ஒருவரை இனந்தெரியாத நபர் ஒருவர் சுட முயற்சித்த போதும் அது தோல்வியடைந்துள்ளது.

பாணந்துறை கேதுமதி மகளிர் வைத்தியசாலையில் இருந்து வந்த அம்பியூலன்ஸ் ஆதார வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்டபோது துப்பாக்கியுடன் ஹெல்மெட் அணிந்த சந்தேக நபர் ஒருவர்  சாரதியை  சுட முயன்றுள்ளார்.

இதன்போது தோட்டா வாகனத்தில் மோதி வீசப்பட்டதில் துப்பாக்கி செயலிழந்துள்ளது. 

இன்று காலை 11.45 மணியளவில் சாரதி, சுகயீனமடைந்த பெண்ணுடன் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு வந்த போது இந்நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்துள்ளனர்.

அம்புலன்ஸ் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்ததும், அம்புலன்ஸ் சாரதியை  ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

மற்றொரு நபர் துப்பாக்கி ஏந்திய நபருக்கு பாதுகாப்பு அளித்து மருத்துவமனையின் பிரதான வாயில் அருகே நின்று கொண்டிருந்தார்.

மற்றைய இருவரும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு சகநண்பர்களுடன் தப்பிச் செல்ல தயாராகி வந்தது தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், கொலை முயற்சி தோல்வியடைந்ததையடுத்து நான்கு பேரும் தப்பியோடியது சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

துப்பாக்கி செயலிழந்ததால் சாரதியின் உயிர் காப்பாற்றப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

வண்டியின் சாரதி களுத்துறை வடக்கு பகுதியில் வசிப்பவர் எனவும் சம்பவத்தின் பின்னணி விபரங்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் சுமார் 42 மில்லியன் ரூபா பெறுமதியான 42 கிலோ ஹெரோயினை பொலிஸாருக்கு உளவு பார்த்தமையினால் சாரதிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.