உலகின் 90 வருடங்கள் பழமை வாய்ந்த மீன் எங்கிருக்கிறது தெரியுமா.?

Keerthi
4 years ago
உலகின் 90 வருடங்கள் பழமை வாய்ந்த மீன் எங்கிருக்கிறது தெரியுமா.?

அமெரிக்காவில் இருக்கும் மெதுசலா என்ற மீன் உலகின் 90 வருடங்கள் பழமை வாய்ந்த மீன் என்று கருதப்படுகிறது.

கலிபோர்னியா அகாடமி ஆப் சயின்ஸின் உயிரியலாளர்கள், உலகிலேயே பழமைவாய்ந்த மீன் மெதுசலா என்று நம்பப்படுவதாக கூறியுள்ளனர். இந்த மீனிற்கு 90 வயது என்று நம்பப்படுகிறது. இது 4 அடி நீளமும், 18.1 கிலோகிராம் எடையும் உடையது. இந்த மீன் கடந்த 1938 ஆம் வருடத்தில் ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து சான் பிரான்சிஸ்கோ அருங்காட்சியகத்திற்கு எடுத்து செல்லப்பட்டிருக்கிறது.

செவுள்கள் மற்றும் நுரையீரலை உடைய பழமையான இந்த மீன் நீர் மற்றும் நில வாழ் உயிரினங்களுக்கு இடையிலுள்ள பரிணாம இணைப்பு என்று கருதப்படுகிறது. சில வருடங்களுக்கு முன் இந்த மீன் சிகாகோவில் இருந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2017-ஆம் வருடத்தில், தன் 95 வயதில் இந்த மீன் இறந்துவிட்டது. எனினும், அகாடமியில் இந்த இனத்தை சேர்ந்த இரண்டு மீன்கள் இருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4