சீரற்ற வானிலை: தரம் 5 மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து நாளை முக்கிய ஆலோசனை!

#SriLanka #weather #Lanka4 #Examination #discussion #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
சீரற்ற வானிலை: தரம் 5 மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து நாளை முக்கிய ஆலோசனை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளைத் தடங்கலின்றி நடத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை (05) நடைபெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

தற்போது தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு அல்லது சீரற்ற வானிலையால் அனர்த்தங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில், மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பரீட்சை நடவடிக்கைகளை எவ்வாறு பாதுகாப்பாக முன்னெடுப்பது என்பது குறித்து இங்கு விரிவாக ஆராயப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4