690 கோடி அமெரிக்க டொலர்கள் இந்த ஆண்டுக்குள் செலுத்த வேண்டும்!

Mayoorikka
2 years ago
 690 கோடி அமெரிக்க டொலர்கள் இந்த ஆண்டுக்குள் செலுத்த வேண்டும்!

2022 ஆம் ஆண்டில் சுமார் 690 கோடி அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடனை திரும்ப செலுத்த வேண்டியுள்ளதாக நிதியமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது.

டொலர்களில் செலுத்த வேண்டிய உள்நாட்டு கடனும் இதில் அடங்குவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் 390 கோடி டொலர்கள் வருடந்தின் முதல் காலாண்டில் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த தொகையில் 50 கோடி டொரை இலங்கை மத்திய வங்கி அண்மையில் செலுத்தியது. இதனை தவிர மேலும் 100 கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சர்வதேச இறையாண்மை பிணை முறி பத்திரங்களின் காலம் ஜூலை மாதம் முடிவடையவுள்ளது.

இந்த தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக நிதியமைச்சு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்குள் சர்வதேச இறையாண்மை பிணை முறி பத்திரங்களுக்கு வட்டியாக 86 கோடி அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் நிதியமைச்சு தனது அறிக்கையில் கூறியுள்ளது.