நாட்டிற்கான இறக்குமதி செலவு கணிசமான அளவு அதிகரிப்பு

Prathees
2 years ago
நாட்டிற்கான இறக்குமதி செலவு கணிசமான அளவு அதிகரிப்பு

நவம்பர் 2021 இல் நுகர்வோர் பொருட்களின் இறக்குமதிக்கான செலவானது 2020 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில்  19.7 வீதத்தால் அதிகரித்துள்ளதாக  இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கார் இறக்குமதியில் கணிசமான சரிவு இருந்தாலும், உணவு மற்றும் உணவு அல்லாத நுகர்வோர் பொருட்களின் விலை அதிகரித்து வருவது உயர்வுக்கு பங்களித்துள்ளது.

கொவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்க, கார்கள் உட்பட அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி மார்ச் 2020 இல் நடவடிக்கை எடுத்தது.

வெளிநாட்டு நாணயத்தை நாட்டில் வைத்திருக்கும் நோக்கத்துடன் இந்த முடிவு நீட்டிக்கப்பட்டது

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீள அனுமதிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

அதன்படி, கார் இறக்குமதியில் குறிப்பிடத்தக்க சரிவு இருந்தபோதிலும், உணவு மற்றும் உணவு அல்லாத நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவு நவம்பர் 2020 உடன் ஒப்பிடும்போது 2021 நவம்பரில் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2020 நவம்பரில் நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 255.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இருப்பினும், நவம்பர் 2021 இல் நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 305.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

மருந்து, தடுப்பூசிகள்,கையடக்கத் தொலைபேசிகள், உள்ளாடைகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற உணவு அல்லாத பொருட்களின் இறக்குமதிச் செலவு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.