நெருக்கடி நெருங்குகிறது: எரிசக்தி அமைச்சர் எச்சரிக்கை

Prathees
2 years ago
நெருக்கடி நெருங்குகிறது: எரிசக்தி அமைச்சர் எச்சரிக்கை

பெப்ரவரி மாத நடுப்பகுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் மின்வெட்டு ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் மின்சாரத் தேவை 8% அதிகரிக்கிறது. எனவே, தேவையை பூர்த்தி செய்ய அரசு எப்போதும் புதிய மின் உற்பத்தி நிலையங்களை சேர்க்க வேண்டும்.

"துரதிர்ஷ்டவசமாகஇ 2014 ஆம் ஆண்டு முதல் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் எதுவும் எங்கள் மின் விநியோகத்தில் சேர்க்கப்படவில்லை. ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான வழக்கமான வறட்சி காலநிலையில், நமது மின் உற்பத்தி பெரும்பாலும் அனல் மின் நிலையங்களையே சார்ந்துள்ளது."

"தற்போது, ​​அனல் மின் நிலையங்களால், நாட்டின் மொத்த மின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. நவம்பர் மாத நிலவரப்படிஇ நாட்டின் மொத்த மின் உற்பத்தியில், 65% நீர்மின்சாரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டது."

ஆனால் இப்போது அது 25% ஆகக் குறைந்துள்ளது.  மார்ச் மாத தொடக்கத்தில் அல்லது பெப்ரவரி நடுப்பகுதியில் மின்வெட்டு ஏற்படும் என தான் கணித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.