அந்நியச் செலாவணி நெருக்கடியை ஒரேயடியாக தீர்க்க முடியாது: பசில்

Prathees
2 years ago
அந்நியச் செலாவணி நெருக்கடியை ஒரேயடியாக தீர்க்க முடியாது: பசில்

நாடு எதிர்நோக்கும் பாரதூரமான அந்நியச் செலாவணி நெருக்கடிக்குத் தீர்வு காணும் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நாடு சரியான பாதையில் பயணித்து வருவதாகவும் நிதியமைச்சர் என்ற வகையில் நம்பிக்கை  நிதியமைச்சர் பசில் ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

இதன்படி தற்போது நிலவும் பாரிய டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணப்படுவதுடன் அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் இணைந்து புரிந்துணர்வுடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பணப்பரிவர்த்தனை நெருக்கடியானது தற்போதைய சூழ்நிலையில் பல கட்டங்களாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அதனால் உடனடியாக தீர்வு காண முடியும் என தாம் நினைக்கவில்லை எனவும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்றிலிருந்து மீள்வதற்கும்,  சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிப்பதற்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், இறக்குமதியைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுத்து நாணயமாற்று நெருக்கடியைத் தீர்க்க நாடு சரியான பாதையில் பயணித்து வருவதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இங்கு மத்திய வங்கி நாளாந்தம் அந்நியச் செலாவணி நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபட்டுள்ளது.

நாணயச் சட்டச் சட்டத்தின் கீழ் மத்திய வங்கி ஒரு சட்டபூர்வமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. மறுபுறம்இ அரசாங்கம் மற்றும் நிதி அமைச்சு என்ற ரீதியில், நிதியமைச்சர் என்ற ரீதியில் தாம் கொள்கை முடிவுகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.