தமிழர் தொன்மையும், வரலாறும். பாகம் - 32.

#Article #history #Tamil People
தமிழர் தொன்மையும், வரலாறும். பாகம் - 32.

ஒட்டக் கூத்தர் நூல்கள் (Ottakoothar Books)

  • ஒட்டக்கூத்தர் என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன் (ஆட்சி 1120-1136), இரண்டாம் குலோத்துங்கன் (ஆட்சி 1136-1150), இரண்டாம் இராசராசன் (ஆட்சி 1150-1163) ஆகிய மூன்று சோழர்கள் காலத்திலேயும் வாழ்ந்தவர்.
  • இவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய திருவரம்பூரில்) பிறந்தார்.
  • திருநாவுக்கரசர் பாடிய திருவெறும்பியூர் என்பதுவும் இவ்வூரே.
  • இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கது.

 

  1. இராசராசசோழன் உலா - மூவருலா (Rajaraja Cholan Ula - Muvarula)
  2. குலோத்துங்க சோழன் உலா - மூவருலா (Kulothunga Cholan Ula - Muvarula)
  3. விக்கிரமசோழன் உலா - மூவருலா (Vikrama Cholan Ula - Muvarula)
  4. அரும்பைத் தொள்ளாயிரம்
  5. ஈட்டி எழுபது
  6. உத்தர ராமாயணம் (உத்தர காண்டம்)
  7. எதிர் நூல்
  8. கண்டன்கோவை
  9. காங்கேயன் நாலாயிரக் கோவை
  10. தக்கயாகப்பரணி
  11. தில்லையுலா

தொடரும்....