இலங்கையில் வேகமாக பரவும் ஒமைக்ரோன் - நாளை வெளிவரவிருக்கின்ற முக்கிய அறிவிப்பு...

Keerthi
2 years ago
 இலங்கையில் வேகமாக பரவும் ஒமைக்ரோன் - நாளை வெளிவரவிருக்கின்ற முக்கிய அறிவிப்பு...

இலங்கையில் ஏற்கனவே டெல்டா வைரஸ் பரவிக்கொண்டுள்ள நிலையில் அதனை விடவும் பல மடங்கு வேகமாக ஒமைக்ரோன் வைரஸ் பரவுவதை அவதானிக்க முடிகின்றது.

இந்த நிலைமை தொடருமானால் பெப்ரவரி மாதம் இறுதிக்குள் நாடு முழுவதும் ஒமைக்ரோன் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார பணியகத்தின் பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொவிட் நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது அமுலிலுள்ள சுகாதார விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய சுகாதார வழிகாட்டல்கள் நாளைய தினம் (31) வௌியிடப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் பொதுமக்கள் செயற்படும் விதம், அடுத்த இரண்டு வாரங்களில் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் என்பதால் மிகுந்த பொறுப்புடன் செயலாற்றுமாறு அவர் தெரிவித்துள்ளார். இருந்தும் டெல்டா வைரசை விட ஒமைக்ரோன் வைரசு அபாயம் குறைவாக இருப்பதாக அதனால் பாதிக்கப்பட்டவர்களின் கருத்தையும் இங்கே சுட்டிக்காட்டலாம்.