இலங்கைக்கு வரும் அதிகமான ரஸ்யர்களால் இலங்கைக்கு அதிக வருமானமா? ஆபத்தா?

Keerthi
2 years ago
இலங்கைக்கு வரும் அதிகமான ரஸ்யர்களால் இலங்கைக்கு அதிக வருமானமா? ஆபத்தா?

இம்மாதத்தின் முதலாம் திகதியில் இருந்து நேற்று வரை இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் பெருமளவானோர் ரஷ்ய நாட்டவர்கள் என சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. 

2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை 76,538 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ரஷ்யர்கள் 12,368 பேரும்,  11,028 இந்தியர்கள், 7,427 உக்ரேனியர்கள், 6,929 பிரித்தானியர்கள், 4,902 ஜேர்மனியர்கள் மற்றும் 3,337 பிரெஞ்சு பிரஜைகள் இந்த காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ளனர்.
 
கடந்த ஆண்டு ஜனவரியில் 1,682 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.  
இருந்தும் ரஸ்யர்கள் பலர் சுற்றுலாவுடன் இரத்னக்கல் வியாபாரமும் செய்வதாக சில இரத்தினகல் வியாபாரிகள் முணுமுணுக்கிறார்கள்.