கனடிய பிரதமர் குடும்பம் தலைமறைவு? உண்மை அல்ல. ஆதாரத்துடன் வருவார் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.

Keerthi
2 years ago
கனடிய பிரதமர் குடும்பம் தலைமறைவு? உண்மை அல்ல. ஆதாரத்துடன் வருவார் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன்  மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கனடாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டாய தடுப்பூசி மற்றும் பிற கோவிட் விதிமுறைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவிட் பரவல் காரணமாக அனைத்து நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளதுடன், மக்களுக்குதடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில் கனடா அரசாங்கமும் கோவிட்  தடுப்பூசி பெற்றுக் கொள்வது கட்டாயம் போன்ற சில விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த கட்டுப்பாட்டுக்களுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது கனடா தலைநகர் முழுவதும் போராட்டம் வலுபெற்றுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் குடும்பத்தினர் ரகசிய இடத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இப்படியான செய்திகளை பரப்பவேண்டாமென சில நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.