மெர்வின் சில்வா வழக்குடன் தன்னை இணைக்கும் தகவல்கள் பொய் – ரீத்து ஆகர்ஷா விளக்கம்!

#SriLanka #Lanka4 #Case #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
மெர்வின் சில்வா வழக்குடன் தன்னை இணைக்கும் தகவல்கள் பொய் – ரீத்து ஆகர்ஷா விளக்கம்!

பிரபல சிங்கள நடிகை ரீத்து ஆகர்ஷா, முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிரான கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குடன் தன்னை தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும், அவை பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் DFCC வங்கிக் கணக்கு தன்னுடையது அல்ல என்றும், அத்தகைய கணக்கை தாம் ஒருபோதும் வைத்திருக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில், தனது பெயரில் அத்தகைய கணக்கு இல்லை என DFCC வங்கி வழங்கியுள்ள உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் கடிதத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும், வழக்கில் குறிப்பிடப்படும் 2010 மார்ச் 31 முதல் 2012 மார்ச் 31 வரையிலான காலப்பகுதியில் தாம் பாடசாலை மாணவியாக கல்வி கற்றுக்கொண்டிருந்ததாகவும், அந்த விவகாரத்துடன் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களை வெளியிட்ட ஊடகங்கள், சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இனிமேலும் இவ்வாறான பொய்யான அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்களை வெளியிடுபவர்கள் மற்றும் பகிர்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரீத்து ஆகர்ஷா எச்சரித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4