அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 31.01.2022

Keerthi
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 31.01.2022

மேஷம்: 
அசுவினி: எதிர்ப்புகள் விலகும். முன்பு இருந்த பயங்கள் நீங்கும்.
பரணி: உங்களது முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
கார்த்திகை 1: அலைச்சலையும், வேலைப்பளுவையும் சமாளிப்பீர்கள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: பணியிடத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பீர்கள்.
ரோகிணி: எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
மிருகசீரிடம் 1,2: வாழ்க்கைத்துணையை அனுசரித்து செல்வது நல்லது.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர். பொறுப்புகள் கூடும்.
திருவாதிரை: உங்களது செல்வாக்கை கண்டு சிலர் பொறாமை கொள்வர்
புனர்பூசம் 1,2,3: உழைப்பால் முன்னேறுவீர்கள். உங்களின் புகழ் கூடும்.

கடகம்: 
புனர்பூசம் 4: உங்களது வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும்.
பூசம்: கூடுதல் நேரம் ஒதுக்கி உங்களது பணியை முடிக்க வேண்டி வரும்.
ஆயில்யம்: தொழில், வியாபாரத்தில் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது.

சிம்மம்: 
மகம்: பதவி உயர்வு கிடைக்கும். அரசாங்க வகையில் நன்மை உண்டு.
பூரம்: கைவிட்டுப் போன பொருள் ஒன்று இன்று மீண்டும் கிடைக்கும்
உத்திரம் 1: குடும்ப நன்மை கருதி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: பணியை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
அஸ்தம்: சேமிக்கும் எண்ணம் தோன்றும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.
சித்திரை 1,2: சுபச்செலவு ஏற்படும். பணியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: வீட்டுப் பராமரிப்புச் செலவு ஏற்படும். பயம் நீங்கும்.
சுவாதி: தேவையில்லாத வாக்குவாதங்கள், மன வருத்தங்கள் ஏற்படும்
விசாகம் 1,2,3: சிறு தாமதங்கள் இருந்தாலும் உங்களது முயற்சி நிறைவேறும்.

விருச்சிகம் : 
விசாகம் 4: வாக்குவாதத்தில் பங்கேற்காமல் அமைதியாக இருப்பது நல்லது.
அனுஷம்: சிறு தொலைவுப் பயணம் ஒன்று நன்மை தரும்.
கேட்டை: சாதுர்யமாக செயல்பட்டு பிறரது பாராட்டுக்களை பெறுவீர்கள்.

தனுசு: 
மூலம்: உங்களது திறமையை நிரூபிக்க கூடுதல் முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.
பூராடம்: பிறரது மனம் புண்படும் வகையில் நகைச்சுவையாக பேச வேண்டாம்.
உத்திராடம் 1: உங்களின் செல்வாக்கு கூடும். உழைப்பு அதிகரிக்கும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: பணியில் அலட்சிய போக்கைக் கைவிட வேண்டும்.
திருவோணம்: தந்தைக்கு நன்மை விளையும். தைரியம் கூடும்.
அவிட்டம் 1,2: நட்பு வட்டம் விரியும். குடும்பத்தில் குதுாகலம் அதிகரிக்கும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: விடாமுயற்சி வெற்றி தரும். உறவுகள் பலப்படும்.
சதயம்: எதையும் எதிர்த்து நிற்பதை விடுத்து நியாயத்தை அனுசரியுங்கள்.
பூரட்டாதி 1,2,3: பெற்றோரின் கோபம் தீரும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: உங்களுக்கு கடமைப்பட்டிருந்த நண்பர் ஒருவர் உதவி செய்வார்.
உத்திரட்டாதி: எதிர்பாலினத்தைச் சேர்ந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
ரேவதி: எதிர்பார்த்த வருமானம் இருக்கும். எதிலும் அதிக கவனம் தேவை.