தடுப்பூசி போடாதவர்களைத் தேடி வருகிறது  பூஸ்டர்

Prathees
2 years ago
தடுப்பூசி போடாதவர்களைத் தேடி வருகிறது  பூஸ்டர்

மக்களைச் சென்றடையும் வகையில் நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் இன்று (31ஆம் திகதி) முதல் செயற்படுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதன்படி, அரச நிறுவனங்கள், தனியார் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள், புகையிரத நிலையங்கள்இ பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு அருகில் நடமாடும் தடுப்பூசி வாகனங்கள் மூலம் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்க நடமாடும் தடுப்பூசி வாகனங்கள் வீடுகளுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

இராணுவத் தளபதி மேலும் தெரிவித்ததாவது,

கடந்த மூன்று முதல் நான்கு வாரங்களாக கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது.

இதுவரை பூஸ்டர் தடுப்பூசியைப் பெறாதவர்கள் இந்த பூஸ்டர் தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், இன்று முதல் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடையவும், இந்த பூஸ்டர் தடுப்பூசியை வழங்கவும் ராணுவம் உள்ளிட்ட பல்வேறு படைகளை ஈடுபடுத்தவுள்ளோம்.

கோவிட் நோயிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற விரும்புகிறோம். தடுப்பூசி பிரச்சாரத்தில் மக்கள் நெருங்கி வந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.