இலங்கையில் கொவிட் தடுப்பூசி பலவந்தமாக செலுத்தப்படுகின்றதா?

#SriLanka
Nila
2 years ago
இலங்கையில் கொவிட் தடுப்பூசி பலவந்தமாக செலுத்தப்படுகின்றதா?

இலங்கையிலுள்ள எந்தவொரு நபருக்கும் பலவந்தமாக கொவிட் தடுப்பூசி செலுத்தப்படாது என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.

கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எனினும், தடுப்பூசி செலுத்திக் கொண்டமையினாலேயே, கொவிட் பரவல் குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.தடுப்பூசி செலுத்தப்பட்டமையினாலேயே, ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வந்து, பரீட்சைகளை நடத்த முடிந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் போது, பெற்றோரின் அனுமதியை பெற்றே, அந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் எந்தவொரு நபருக்கும் பலவந்தமாக தடுப்பூசி செலுத்தப்படவில்லை எனவும், பலவந்தமாக செலுத்த போவதில்லை எனவும் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.